பிரதமர் அலுவலக மேலதிக செயலாளராக அஷ்ரப் நியமனம்
பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக எம்.பீ.எம். அஷ்ரப் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இவருக்கு அமைச்சரவை தீர்மானத்தின் ஊடாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்திற்கு இலங்கை நிர்வாக சேவையின் 05 விசேட தர மேலதிக செயலாளர் பதவிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 03 பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி எம்.பீ.எம்.அஷ்ரபினை வெற்றிடமாகவுள்ள மேலதிக செயலாளர் பதவிக்கு நியமிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, பிரதமர் ஹரினி அமரசூரியவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான பசுமை காலநிலை நிதியத்தின் முகாமைத்துவ நிபுணராக தற்போது இவர் பணிபுரிகின்றார். இதற்கு முன்னர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், இலங்கை நிர்வாக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் போன்ற பல பதவிகளை இவர் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)