செரண்டிப், ப்ரிமா நிறுவனங்களினால் பாணுக்குரிய மாவின் விலை குறைப்பு
அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவுக் குறைப்பு முயற்சிகளை ஆதரிக்கும் வகையில் இலங்கையின் முன்னணி மாவு உற்பத்தி நிறுவனங்களாகிய செரண்டிப் மற்றும் ப்ரிமா நிறுவனங்கள் வர்த்தக அமைச்சுடன் இணைந்து செயற்படவுள்ளது.
இதற்கமைய, பாண் மற்றும் பேக்கரி தயாரிப்புகளின் விலைகளை குறைக்கும் வகையில்இ பேக்கரித் துறையை இலக்காகக் கொண்டு இரு நிறுவனங்களும்இன்று செவ்வாய்க்கிழரைம (பெப்ரவரி 18) முதல் பாணுக்குரிய மாவின் விலையை கிலோ கிராமுக்கு 10 ரூபாவினால் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
"ஜனவரி 2024 இல் முதற்கட்ட குறைப்பாக பாணுக்குரிய மாவின் விலையில் ஒரு கிலோவிற்கு 10 ரூபா குறைப்பை நாம் அமுல்படுத்தினோம். முன்னைய விலைக் குறைப்பு பாண் விலைகளை குறைக்க வழிவகுக்கவில்லை என்றாலும் இரு நிறுவனங்களும் தற்போது ஒரு கிலோவிற்கு மேலதிகமாக 10 ரூபா குறைப்பை மேற்கொள்ள தயாராகவுள்ளன.
இதனால் மொத்த விலைக் குறைப்பு ஒரு கிலோவிற்கு 20 ரூபா ஆகின்றது" என செரண்டிப் மாவு நிறுவனத்தின் வர்த்தக நாம மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் காலிங்க விஜெசேகர தெரிவித்துள்ளார்.
"சமீபத்திய விலைக் குறைப்பு குறித்து வர்த்தக அமைச்சருக்கு நாங்கள் தெரிவித்துள்ளோம். மேலும் இந்த விலைக் குறைப்பின் பிரதிபலனை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம், பாண் மற்றும் பிற பேக்கரி பொருட்களின் விலைக் குறைப்பு மூலம் இறுதி நுகர்வோருக்கு பலன்களை வழங்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்" என அவர் மேலும் கூறினார்
Comments (0)
Facebook Comments (0)