பெண்களை வலுவூட்டவும சமூக விழுமியங்களை உருமாற்றுவும் 5 வருட செயற்திட்டம்

பெண்களை வலுவூட்டவும சமூக விழுமியங்களை உருமாற்றுவும் 5 வருட செயற்திட்டம்

இலங்கையில் பால்நிலை சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான புதிய 5 ஆண்டு நிகழ்ச்சித் திட்டத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கம் ஐ.நா பெண்கள் அமைப்பு மற்றும் தேசிய சிவில் சமூக அமைப்பான கிறிசாலிஸ் உடன் இணைந்து செயற்பட உள்ளது.

"THRIVE - ஒன்றாக அவளுக்காக: இலங்கையில் மீண்டெழுதிறனை கட்டியெழுப்பல், உள்ளடங்கலான தன்மை மற்றும் சமத்துவத்திற்கான குரல்கள்" என்பது பெண்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுவூட்டுவதுடன் பால்நிலை அடிப்படையிலான வன்முறை போன்ற பிரச்சினைகளை நிலைநிறுத்தும் தொடர்ச்சியான மற்றும் தீங்கு விளைவிக்கும் சமூக விழுமியங்களை நிவர்த்தி செய்வதற்காக அவர்களின் குடும்பங்களுடனும் சமூகங்களுடனும் இணைந்து பணியாற்றும்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரான போல் ஸ்டீபன்ஸ் கூறுகையில், “அவுஸ்திரேலியா இலங்கையுடன் நீடித்த பங்காண்மையையும் எமது பிராந்தியத்தில் பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்துவதில் உறுதியான அர்ப்பணிப்பையும் கொண்டுள்ளது.

ஒவ்வொருவரும் தங்களது முழுத் திறனையும் அடைவதற்கான வாய்ப்பை உறுதி செய்யாமல் எந்தவொரு நாடும் அதனது அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது. தீங்கு விளைவிக்கும் சமூக விழுமியங்களை சவாலுக்குட்படுத்துவதன் மூலமும், பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வாழ்வாதாரத்தில் முதலீடு செய்வதன் மூலமும், நாம் அனைத்து இலங்கையர்களும் செழிக்கக்கூடிய எதிர்காலத்தை ஆதரிக்க விரும்புகிறோம்” என்றார்.

THRIVE ஆனது பதுளை, கொழும்பு, கிளிநொச்சி, மன்னார், மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் பல்பரிமாண வறுமை குறிப்பிடத்தக்க சவாலாகத் தொடருகின்ற சமுதாயங்கள் மீது கவனம் செலுத்த உள்ளது. நிகழ்ச்சித் திட்டத்தின் நிலைபேண் தன்மையை உறுதி செய்வதற்காக, தேசிய மற்றும் துணைத் தேசிய அளவில் உள்ள அரச துறை அலுவலர்கள் பால்நிலை திட்டமிடல் மற்றும் வரவு செலவுத் திட்ட செயன்முறைகளில் இயலளவு விருத்தியைப் பெறுவார்கள்.

ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஐ.நா.வின் பெண்கள் அமைப்பின் பிராந்திய பணிப்பாளரான கிறிஸ்டின் அராப் கூறுகையில்: "நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அவசியமாகும்" என்றார்.

“பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான நாட்டின் தேசிய நோக்கினை ஆதரிப்பதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம், இலங்கையில் உள்ள தேசிய பங்குதாரர்கள் மற்றும் பால்நிலை உருமாற்ற அணுகுமுறைகளில் ஐ. நா பெண்கள் அமைப்பு ஆகியோரின் பங்காண்மை முக்கியமானதாகும்.

பால்நிலை சமத்துவத்திற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் இலங்கை மற்றும் பிராந்தியம் முழுவதிலும் அதன் நீண்டகால பங்காண்மைக்காக அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கு ஐ.நா பெண்கள் அமைப்பினர் நன்றி தெரிவிக்கின்றனர்.

THRIVE இன் அறிவிப்பானது சமூக விழுமியங்களை மாற்றுவதையும், GBVயைத் தடுக்க நடத்தை மாற்றத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ள பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு (GBV) எதிரான 16 நாட்கள் செயற்பாட்டுடன் ஒத்துப்போகிறது.

மேலதிகமாக, இந்த செயற்திட்டம் பெண்களின் மீண்டெழுதிறன் மற்றும் முகவராண்மையை கட்டியெழுப்ப ஒரு முழுமையான அணுகுமுறையை முன்னெடுப்பதுடன் 1950க்கும் மேற்பட்ட பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் தங்களது வணிகங்களை விரிவுபடுத்துவதற்கும் காலநிலை தொடர்பான தாக்கங்களை சிறப்பாக தாங்குவதற்கும் ஆதரவளிக்கும்.

THRIVE ஆனது சமூக விழுமியங்களை குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் ஒருங்கிணைத்து உள்ளூர் பெண்களின் அரசியல் பங்கேற்பை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கிறிசாலிஸ் இனுடைய பிரதம நிறைவேற்று அதிகாரியான ஆஷிகா குணசேன குறிப்பிடுகையில், "இந்த முன்முயற்சியானது இயலளவை கட்டியெழுப்பும் வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளங்கள் மற்றும் காலநிலைக்கு மீண்டெழுறனுடைய சொத்துக்களை வழங்குவதன் மூலம் பெண்கள் தங்களது சமூகங்களில் தலைவர்களாக மாறுவதற்கு நிலைத்தன்மையான வழிவகைகளை உருவாக்கும். நாங்கள் இலங்கையிலுள்ள பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான இந்த முக்கியமான முயற்சியில் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.