கொவிட் - 19 சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றது மட்டக்களப்பு கொம்பஸ்
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் புனானை பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள மட்டக்களப்பு கொம்பஸ் இன்று (28) புதன்கிழமை முதல் கொவிட் - 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட நிலையமாக மாற்றப்படுட்டுள்ளது.
இந்த நிலையத்தில் ஒரே தடவையில் 1,200 கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க முடியும் என பொலநறுவை பொது வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர் இந்திக குமார தெரிவித்தார்.
குறித்த சிகிச்சை நிலையம் பொலனறுவை பொது வைத்தியசாலையினால் நிர்வகிக்கப்படுகின்றமையினால் பொலனறுவை வைத்தியசாலையின் அதிகாரிகள் இங்கு கடமையாற்றுகின்றனர்.
Comments (0)
Facebook Comments (0)