பிரயாணத் தடையினை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
நாட்டில் தற்போது அமுலிலுள்ள பிரயாணத் தடையினை நீடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ சங்கத்தினால் இன்று (19) சனிக்கிழமை எழுத்து மூலமான இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது அமுலிலுள்ள பிராயணத் தடையினை எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கி பின்னர் 23ஆம் திகதி புதன்கிழமை இரவு 10.00 மணி முதல் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே இந்த பிரயாணத் தடையினை நீக்காமல் தொடர்ந்து நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)