15 நாணய மாற்று நிறுவனங்களின் அனுமதிப்பத்திரம் ரத்து
பதினைந்து நாணய மாற்று நிறுவனங்களின் நாணயப் பரிமாற்றலுக்கான அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களின் நிபந்தனைகளுடன் இணங்கியொழுகாமையின் காரணமாகவே 15 நாணய மாற்றுநர்களின் நாணயப் பரிமாற்றல் அனுமதிப் பத்திரங்களை 2023ஆம் ஆண்டுக்கு புதுப்பிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அத்துடன் இது தொடர்பில் குறித்த நாணய மாற்றுநர்களுக்கு 2023.02.22ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கீழே பட்டியலிடப்பட்ட கம்பனிகள் நாணயப் பரிமாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இனிமேலும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அத்தகைய கம்பனிகளுடன் வெளிநாட்டு நாணயத்தை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் என்பன 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளை மீறியதாகக் கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Comments (0)
Facebook Comments (0)