அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு 18 பேர் நியமனம்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் அடங்கிய அரசாங்க நிதி பற்றிய குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இன்று (03) சபையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய, கலாநிதி பந்துல குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வல, சுசில் பிரேமஜயந்த, விதுர விக்ரமநாயக்க, கலாநிதி சரத் வீரசேகர, டி.வி.சானக, கலாநிதி நாளக கொடஹேவா, அநுர பிரியதர்ஷயயாப்பா, விஜித ஹேரத், டிலான் பெரேரா, கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா, எம்.ஏ.சுமந்திரன், சமிந்த விஜயசிறி, ஹேஷா விதானகே, இசுரு தொடங்கொட, அநூப பஸ்குவல், எம்.டபிள்யூ.டி.சஹன் பிரதீப் விதான, பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் இக்குழுவுக்குப் பெயரிடப்பட்டுள்ளனர்.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தவிசாளர் அங்குழுவின் அங்கத்துவ உறுப்பினர்களிலிருந்து அக்குழுவினாலேயே தெரிவுசெய்யப்படுவது தொடர்பான பிரேரணையும் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)