நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படக்கூடாது: தொண்டமான்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படக்கூடாது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.
கொட்டகலையில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், "ஜனாதிபதியானவர் சிறுபான்மை மக்களது வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்றவராக இருக்க வேண்டும் என்றும், எனவே அவர் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும்" என்றார்.
"அதுவே சிறுபான்மை மக்களுக்கு நன்மையைத் தரும். அதேநேரம் ஜனாதிபதி தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக இன்னும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம் எடுக்கவில்லை. அந்த விடயத்தில் அவசரப்பட போவதில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)