சமய விவகார அமைச்சர் - சவூதி தூதுவர் சந்திப்பு

சமய விவகார அமைச்சர் - சவூதி தூதுவர் சந்திப்பு

புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிற்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானியிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பரும் பங்கேற்றிருந்தார்.

ஹஜ் விவகாரம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்காக அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோர் இந்த வார இறுதியில் சவூதிக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையிலேயே இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவருடான சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.