பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக ரிஷி சுனக்
ரிஷி சுனக்கிற்கு மக்கள் ஆணை இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சிகள் மற்றும் அவரது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தாலும், அவர் வரலாற்றை உருவாக்க முன்னோக்கிச் சென்றுள்ளார்.
அவர் பிரிட்டனின் முதல் சிறுபான்மை இன பிரதமர் அல்ல, ஆனால் அவர் பதவியை வகிக்கும் முதலாவது ஆசிய மற்றும் முதல் “வெள்ளையர் அல்லாத" நபராவார்.
கன்சர்வேடிவ் கட்சியில் ஒரு சிரேஷ்ட பதவியை வகிக்கும் முதல் "தெற்காசியர்" அவரல்ல, ஆனால் அதனை தலமை தாங்கும் முதல் நபர் அவராவார்.
அரச குடும்பத்தினரை விட பணக்காரராக இருக்கும் முதல் பிரிட்டிஷ் பிரதமரும் இவரே. இந்தியர்களை நாய்களுக்கு இணையாகக் கருதி, ஒரு நூற்றாண்டுக்கு முன் அதன் கிளப்புகளில் இந்தியர்களையும் நாய்களையும் தடை செய்த ஒரு நாட்டில், "அனைத்து இந்தியத் தலைவர்களும் குறைந்த திறன் கொண்டவர்களாகவும் வைக்கோல் மனிதர்களாகவும் இருப்பார்கள்" என நாட்டின் மிகவும் பிரியமான பிரதமர் கூறியதாக அறிக்கையிடப்பட்ட நாட்டில் இது இடம்பெற்றிருக்கின்றது.
சுனக் ஒரு கடினமான பணி என்று மட்டுமே விவரிக்கப்படுவதை மேற்பார்வை செய்கிறார். கன்சர்வேடிவ் கட்சியானது 2010ல் கோர்டன் பிரவுன் வெளியேறியதில் இருந்து, கடந்த 20 ஆண்டுகளில் மேற்கத்திய ஜனநாயகத்தில் உள்ள மற்ற எந்தக் கட்சியையும் விட நீண்ட காலம் ஆட்சியில் உள்ளது.
இன்னும் அது மாற்றத்திற்கு பின்னராக மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது இன்னும் நினைவில் உள்ளது. 1985ல் இருந்து அமெரிக்க டொலருக்கு எதிராக பவுண்ஸ்சின் மதிப்பு மிகக் குறைந்த அளவிற்கு மதிப்பிழந்துள்ளது.
பிரிட்டனின் வெளியேற்றம் (Brexit) தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையவில்லை. ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பல பிரச்சினைகளில் பிளவுபட்டதுடன், இது தொழிலாளர் கட்சியையும் பிளவுபடுத்தியுள்ளது.
எதிலும் ஒருமித்த கருத்து இல்லை. சுனக்கின் பணி, இந்த வகையில், கட்சியை ஒருங்கிணைத்து நாட்டை வழிநடத்துவதாகும். அவர் என்ன செய்கிறார் என்பது வெளிப்படையாக கண்காணிப்புக்கு உட்பட்டதாகும்.
அதனால் அவர் என்னவாக இருப்பார். சுனக்கின் நியமனம், பராக் ஒபாமாவின் தேர்தல் பெற்றதைப் போன்ற பாராட்டுகளைப் பெறவில்லை, ஆனால் உலகத் தலைவர்கள் மற்றும் இன்னும் பல வரலாற்றாசிரியர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடமிருந்தான வாழ்த்துச் செய்திகள் வெளிப்படையானதை வலியுறுத்தியுள்ளன.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை ட்வீட் செய்வதற்கு சார்லஸ் III மன்னரால் சுனக் பிரதமராக உறுதிப்படுத்தப்படும் வரை காத்திருக்கவில்லை. சுனக்கின் எழுச்சியை பிரிட்டனுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அவர் கருதினார்.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளும் இதனைப் பின்பற்றியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சுனக்கின் பெயரை "ராஷி சனூக்" என்று தவறாக உச்சரித்தபோதிலும் இன்னும் பரீட்சயமாகியிருக்கலாம், ஆனால் அவர் அந்த நியமனத்தை "அடிப்படையை மாற்றியமைத்த நிகழ்வு " என்று அழைத்தார்.
மற்றய வாழ்த்துக்கள் இன்னும் வரவிருக்கின்றன. உதாரணமாக, சுனக்கின் கட்சி அல்லது அவரது அமைச்சரவையின் அரிதான அபிமானியான வில்லியம் டால்ரிம்பிள், அவரது நியமனத்தை முற்போக்கானது என்று குறிப்பிட்டார்.
அந்த ட்வீட் அழிக்கப்பட்டிருப்பதாக தோன்றுகின்றது. சுனக்கின் எழுச்சி பிரிட்டிஷ் அரசியல் அமைப்பின் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தன்மைக்கான நினைவூட்டல் மற்றும் அதன் நிறத்தின் மீதான தகுதிக்கான சிறப்புரிமை அத்துடன் பாஜகவின் பெரும்பான்மை அரசியலுக்கான மீள் இணைப்பு என சசி தரூர் வாதிடுகிறார்.
இந்து தேசியவாதிகள் தாமே சுனக்கை வெளிநாட்டில் தாம் என்ன செய்ய முடியும் மற்றும் சாதிக்க முடியும் என்பதற்கான மற்றொரு உதாரணமாக பார்க்கிறார்கள். இந்த ஆரவாரம் அனைத்தையும் சுனக்கின் உண்மையான பின்னணியுடன் வகைப்படுத்துவது கடினம், இருப்பினும் இதில் பெரும்பாலானவை நியாயமானவையாகும்.
உதாரணமாக, அவரது இந்திய வம்சாவளியைப் பற்றிய பரபரப்பு, சுனக் இந்தியாவில் பிறக்கவில்லை என்ற உண்மையைத் தவறவிட்டது.
அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களாவர். அவரது தோற்றம் பற்றி பலர் நம்பிக்கை கொண்டிருந்தாலும், அவரை வரவேற்பவர்கள் கூட எச்சரிக்கையாக இருந்தனர்.
"இது ஒட்டுமொத்தமாக நல்லது மற்றும் எங்களின் பிரதிநிதித்துவம் முக்கியமானது", என்று பிரிட்டிஷ்-பஞ்சாபி எழுத்தாளர் சந்த்னம் சங்கேரா கூறுகிறார், "ஆனால் இது போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே". சங்கேராவைப் பொறுத்தவரை, சுனக்கின் "புலனாகும் சிறுபான்மை" அம்சங்கள் கன்சர்வேடிவ் கட்சியுடன் தொடர்புடைய அரசியல் முரண்பாடு மற்றும் விலகல் தன்மையை மறைக்க உதவுகின்றன.
ஆனால் கன்சர்வேடிவ் கட்சியே மாறி வருவதுடன், குறைந்தபட்சம் டேவிட் கேமரூன் தனது தேர்தல் உத்திகளை 2015இல் மாற்றி, வெளிப்படையாக ஒரு பிரிட்டிஷ் ஆசிய நாட்டவரை தனது பதவிக்கு அழைத்தார். பெரும்பாலான பிரிட்டிஷ் தெற்காசியர்களின் அரசியல் தொடர்புகள் அவ்வாறானவைதான்.
50 ஆண்டுகளுக்கு முன்பு, தெற்காசிய மற்றும் ஆபிரிக்க குடியேற்றத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஏனோக் பவல் உத்வேகம் அளித்தபோது, பிரிட்டிஷ் இந்தியர்களும் பிரிட்டிஷ் பாகிஸ்தானியர்களும் தொழிற் கட்சிக்கு அதிகளவில் வாக்களித்த வாய்ப்புகள் இருந்தன.
இன்று அவர்கள் கன்சர்வேட்டிவ்களுடன் அதிகளவில் சார்பாக உள்ளார்கள். இந்த மாற்றத்தை மற்ற சிறுபான்மையினருடன் ஒப்பீட்டளவிலான இந்த சமூகங்களின் செல்வச் செழிப்பு, மற்றும் பாரம்பரியம் மற்றும் இணக்கத்திற்கான ஆசிய வலியுறுத்தல் உள்ளிட்ட பல காரணிகள் விளக்குவதுடன் தொழிற் கட்சியை விட கன்சர்வேடிவ் கட்சியுடன் அதிகமாக பகிர்ந்து கொள்வது பெறுமதியாக பார்க்கப்பட்டது.
சுனக் இப்போது ஒருவர் என்று எண்ணப்படாத, ஆனால் இரண்டு தெற்காசிய மற்றும் "இந்திய" வம்சாவளி பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறார். இதுவரையிலும் இருவரும் விமர்சனத்துக்குரிய கொள்கைகளை ஆதரித்துள்ளனர்.
உள்துறை செயலாளராக, பிரிதி பட்டேல் ஒரு சர்ச்சைக்குரிய புகலிடத் திட்டத்தை இறுதி செய்ததுடன், இது தி கார்டியன் கேலிச்சித்திர ஓவியர் ஸ்டீவ் பெல் பட்டேலை பவலுடன் ஒப்பிட வழிவகுத்தது, மேலும் அவரது வழித்தோன்றலான, சுயெல்லா பிராவர்மேன் முன்மொழியப்பட்ட இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக, இது இந்திய குடியேற்றத்தை பெருக்கும் என்ற அடிப்படையில் குற்றம் சாட்டினார்.
பிரேவர்மேன் தினேஷ் டிசோசாவின் ஐரோப்பிய காலனித்துவத்தின் தற்பாதுகாப்பை நினைவுபடுத்தும் காரணங்களுக்காக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் புகழ்ந்து பதிவு செய்துள்ளார். இந்த உறுப்பினர்கள், மேலும், சிறுபான்மைக் குழுக்களால் அரிதாக விரும்பப்படும் அல்லது கொண்டாடப்படும் மார்கரெட் தாட்சரை அடிக்கடி ஞாபகமூட்டினர்.
இது சிலருக்கு புதிராக இருக்கலாம், ஆனால் அது அவ்வாறிருக்கக்கூடாது. கன்சர்வேடிவ் கட்சி தெற்காசியர்களை மட்டும் அல்லாது பல சிறுபான்மையினரை அதன் உயர் பதவிகளுக்கு வரவேற்றாலும், அதன் பிளவுபடுத்தும் அரசியலை கைவிடவில்லை என்று சில விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவற்றில் பெரும்பாலான தெற்காசியாவிலிருந்து நழைபவர்களில் முன்னாள் திறைசேரியின் தலைவரான சஜித் ஜாவித் போன்ற சிலரைத் தவிர, செல்வந்த குடும்பப் பின்னணியையும் தொடர்புகளையும் கொண்டவர்களாவர்.
பிரேவர்மேன், படேல் மற்றும் சுனக் ஆகியோர் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், சிறந்த அரச பாடசாலைகள் மற்றும் சிறந்த பல்கலைக்கழகங்களில் படித்தவர்களாவர். ஒரு வர்ணனையாளர் ட்விட்டரில் கூறியது போல், "எத்தனை தெற்காசியர்கள்... £700+ மில்லியன் தனிப்பட்ட சொத்தை வைத்திருக்கிறார்கள்?"
கேள்வி, அந்த வகையில், எது சிறப்பானது: இனப்பல்வகைமையா அல்லது சமூக வகுப்பா என்பதைப் பற்றியதாகும். தி கார்டியனில் எழுதுகையில், பங்கஜ் மிஸ்ரா, சுனக்கை "இடுப்பில் வேட்டி அணிந்த பக்தியுள்ள இந்துவைக் காட்டிலும் பார்க்க சூட் உடை அணிந்த மனிதர்" என்று அழைக்கிறார்.
காலனித்துவ கடந்த காலத்திலிருந்து தத்தளிக்கும் ஒரு நாட்டிற்கு, சுனக்கின் பிரதமர் பதவி முற்போக்கானதாக வரவேற்கப்பட வேண்டும் என்று மிஸ்ரா வாதிடும் அதநேரம், ஆனால் கன்சர்வேடிவ் கட்சியுடன் இன்னும் பலர் இணைக்கும் வர்க்க அரசியலை இது மறைக்காது என்றும் கூறுகிறார்.
பிரிட்டனில் உள்ள தெற்காசிய மக்களின் இதயத்தில் உள்ள முரண்பாடுகள் பொருளாதாரம் சார்ந்தவையாகும்: பாகிஸ்தானியர்களைப் போன்ற சில குழுக்கள், மிகக் குறைந்த வருமானம் கொண்ட இடத்தை ஆக்கிரமித்துடன், மற்றவர்கள், பிரதானமாக இந்தியர்கள், மிக உயர்ந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
அவர்களின் துணைப் பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து, மானுடவியலாளர் ரோஜர் பல்லார்ட் எழுதுகையில், கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து வந்த குஜராத்திகள் மற்றும் பஞ்சாபிகள் போன்ற குழுக்கள் "மேலெழுந்து வெளிவர வழிவகுத்தனர்", 2007 இல் ஜோசப் ரவுன்ட்ரீ அறக்கட்டளையின் ஆய்வில் இங்கிலாந்தில் உள்ள மிகக் குறைந்த ஏழை சமூகங்களில் பிரிட்டிஷ் இந்தியர்கள் இருந்தமை கண்டறியப்பட்டது.
சுவாரஸ்யமான முறையில், கை பீட்டர்ஸ் மற்றும் பாட்ரிசியா டேவிஸ் ஆகியோர் சுட்டிக்காட்டியதைப் போல,1980களில் மார்கரெட் தாட்சரின் கொள்கைகளுக்காக சிறுபான்மைக் குழுக்கள் போலீஸாருடன் மோதிய போதும், இந்திய-பாகிஸ்தானியர்கள் மேற்கிந்தியர்களைப் போன்ற பிற குழுக்களுடன் மோதியதுடன், இது வணிகம் மற்றும் வர்த்தகத்தின் மீதான அவர்களின் பிடி மீது வெறுப்பேற்படுத்தியது.
இந்த நுணுக்கங்கள் ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி மூழ்கடித்த புகழ்ச்சியில் தொலைந்துவிட்டன. பராக் ஒபாமா 2008 இல் அதிக பாராட்டுகளைப் பெற்றார், ஒருவேளை அவர் சிறுபான்மை சார்பான, இனவெறி எதிர்ப்பு மற்றும் சலுகைகளுக்கு எதிரான அரசியலுடன் தொடர்புடைய ஒரு கட்சியில் இருந்து வந்ததால், அத்தகைய விளக்கங்களின் உண்மைத்தன்மையைப் பொருட்படுத்தவே இல்லை.
பிரிட்டனிலும் இந்தியாவிலும் இந்தியர்கள் சுனக்கை வரவேற்றுள்ளனர். அவர்களில் ஒரு சிலர் கூட வேறுபடவில்லை. இன்னமும் சுனக் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினரின் நற்பெயரை அரிதாகவே அனுபவிக்கும் ஒரு கட்சியைச் சேர்ந்தவராவார்.
அநேகமாக இது தவிர்க்க முடியாத வாழ்த்துக் குறிப்புகள் மற்றும் ட்வீட்களைக் குறைக்கிறது. அதுவும், இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்ற ஒபாமாவைப் போன்ற ஒருவர் அல்லாமல், சுனக் தனது மூன்று முன்னோடிகளைப் போல தேர்ந்தெடுக்கப்படாதவராகவே இருக்கிறார்.
உதித தேவப்பிரிய Factum இல் சர்வதேச உறவுகள் தொடர்பான பிரதம பகுப்பாய்வாளராவார். அவரை uditha@factum.lk இல் தொடர்பு கொள்ளலாம்.
Factum என்பது ஆசியாவை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.
Comments (0)
Facebook Comments (0)