அப்துர் ரஹ்மானை சஜிதுடன் இணையுமாறு அழைப்பு
எம்.எஸ்.எம்.நூர்தீன்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளாரும், பொறியியலாளருமான எம்.எம்.அப்துர் ரஹ்மானை சஜித் பிரமேதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர்களை காத்தான்குடியில் வைத்து இன்று (16) புதன்கிழமை மாலை சந்தித்த போது இவ்வழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்ததுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவசிளாரும், பொறியியலாளருமான எம்.எம்.அப்துர் ரஹ்மானை சஜித் பிரமேதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மதும பண்டார பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப் ஆகியோரே இந்த அழைப்பினை விடுத்தனர்.
Comments (0)
Facebook Comments (0)