கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக தௌபீக் நியமனம்
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய தனது கடமைகளை இன்று (09) வெள்ளிக்கிழமை திருகோணமலையிலுள்ள மாகாண பணிப்பாளர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
சம்மாந்துறையினை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுகாதார அமைச்சில் பல உயர் பதவிகளை வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments (0)
Facebook Comments (0)