'தொழிநுட்ப குழு பரிந்துரைத்தால் மாத்திரமே அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்'
"சுகாதார அமைச்சின் தொழிநுட்ப குழு பரிந்துரை செய்தால் மாத்திரமே கொவிட் - 19 இனால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியும்" என ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு என்ற விதத்தில் தமக்கு தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை எட்ட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட் - 19 இனால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நேற்று (10) புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
பிரதமரினால் வெளியிடப்பட்ட கருத்து எப்போது வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)